• November 20, 2019
0 Comments

பச்சைமிளகாய்களை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து அதன் காம்புகளை நீக்கி லேசாக வாய் திறந்தார்போல் கீறி கொள்ள வேண்டும். நன்கு புளித்த தயிரில் தேவையான அளவு உப்பு போட்டு அதனுடன் மிளகாயையும் போட்டு குலுக்கி இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும். பின் அவற்றினை எடுத்து வெயிலில் உலர்த்தி மீண்டும் தயிரில் போட வேண்டும். இதே போல் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு செய்து வந்தால், மிளகாய் வெளுத்து, உப்பு நன்றாகப் பிடித்து காணப்படும். பின் அவற்றினை வெயிலில் உலர்த்தி காய வைத்து பாட்டிலில் அடைத்து வைக்க வேண்டும். இப்போது மோர் மிளகாய் தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *