• November 20, 2019
0 Comments

வெங்காயத்தை தோல் நீக்கி மிகவும் பொடியாக நறுக்க வேண்டும். பூண்டை நசுக்கி கொள்ள வேண்டும். வெந்தயம், சீரகம், பெருங்காயம், சோம்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக வறுத்து ஒன்றாகப் பொடித்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயத்தை வதக்க வேண்டும். பின் பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வினிகர், மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த பொடி, உப்பு சேர்த்து சுருள வதக்கி இறக்க வேண்டும். இப்போது வெங்காய தொக்கு தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *