• October 21, 2019
0 Comments

கடந்த 2008ம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமழில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் நானா படேகர். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்து 2018ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான நானா படேகர் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் ஜன கன மன என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நானா படேகர் நடிக்கிறார். மேலும அஹ்மத் இயக்கிவரும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *