• October 21, 2019
0 Comments

மோடி சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்வதற்கு முன்பு டுவிட்டரில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தமிழில் ‘டுவிட்’ செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் (தமிழகம்) மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி. அழகிய மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய-சீன முறை சாரா உச்சி மாநாட்டிற்கு உறுதுணை புரிந்து உபசரிப்பு நல்கிய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக கலாசார அமைப்புகளுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *