• October 19, 2019
0 Comments

புதுடெல்லி:

பொதுமக்களின் போக்குவரத்து சாதனங்களில் ரெயிலுக்கு முக்கிய இடம் உண்டு. நவீன தொழில்நுட்பயுகத்தில் நிறைய மாற்றங்கள் வந்தாலும், ரெயில் பயணம் என்பது தனி சுகமே. இதற்கிடையே மத்திய அரசு ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டங்களை கொண்டு வந்தது. இதற்காக, ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி உள்ளிட்ட பயணிகளின் பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து பிரிவுகளும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டது.

ரெயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், டெல்லி – லக்னோ வழித்தடத்தில் இயங்கும் தேஜஸ் அதிவேக ரெயில் தனியார் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மேலும் 150 ரெயில்கள் மற்றும் 50 ரெயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்பந்த முறையில் ஒப்படைக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *