• October 19, 2019
0 Comments

பெங்களூரு:

கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது, கர்நாடகத்தில் வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக எனது தலைமையில் மந்திரி சபை துணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் கூட்டம் எனது தலைமையில் இன்று (அதாவது நேற்று) பெங்களூருவில் நடைபெற்றது.

ரூ.50 லட்சம் வரையுள்ள பணிகளுக்கு டெண்டர் இல்லாமல் அனுமதி வழங்கப்படுகிறது. கர்நாடகத்தில் வழக்கத்தை விட நடப்பாண்டில் 15 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. பெட்டி கடைகள், குடிசைகள் உள்ளிட்டவை சேதம் அடைந்திருந்தால், தேசிய பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகள் படி உதவி வழங்கப்படாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *