• October 19, 2019
0 Comments

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்குவதையொட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடை பெற்றது. இதில் அக்கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

சட்டசபையில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முக்கியமாக வடகர்நாடகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரண பணிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்தும் பிரச்சினை கிளப்ப முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *