• October 21, 2019
0 Comments

ஸ்ரீநகர்:

ஆகஸ்ட் 5 ந்தேதி ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை நீக்கிய பின் கடந்த 2 மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் இருந்தன இந்த நிலையில் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர், ஆளுநரின் ஆலோசகர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தையடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டன. சுற்றுலாவையே நம்பிய பல சிறுதொழில்கள் மூடப்பட்டு இருந்தன. கடந்த 2 மாதங்களில் ஊடக செய்தியாளர்கள் உட்பட 150 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே ஜம்மு காஷ்மீருக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *