• October 20, 2019
0 Comments

திண்டுக்கல் – சிலுவத்தூர் சாலையில் பழனி, கரூர், சென்னை மார்க்கமாக செல்லும் 3 ரெயில்வே கேட்டுகள் மூடப்படுவதால், அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதனால் அங்கு மேம்பாலம் அமைக்கும் பணி 5 வருடத்துக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால், அங்கு குடியிருப்பவர்கள் , ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மேம்பால பணியை விரைவில் முடிக்க மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அனைத்து நலச்சங்கள், பொதுமக்கள் சார்பாக ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *