• October 21, 2019
0 Comments

இலங்கையில் ஹட்டன் பொகவந்தலாவ பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பொகவந்தலாவ கொட்டியாகலை மற்றும் தெரேசியா ஆகிய தோட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 49 குடும்பங்களை சேர்ந்த 238 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். தொடர்ந்து பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 38 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில் நேற்று மாலை வெள்ளம் சூழ்ந்துள்ளது . இந்த பெரும் வெள்ளத்தினால் 38 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையெனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளனர் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *