• October 21, 2019
0 Comments

கேரள ஒலிம்பிக் அசோசியேசன் சார்பில் திருவனந்தபுரத்தில் பி.வி. சிந்துவுக்கு பாராட்டு விழா நடைபெற்ற போது, பி.வி. சிந்துவிற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இவ்விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள அரசு சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும், ஒலிம்பிக் அசோசியேசனின் பரிசு கோப்பையையும் பி.வி. சிந்துவுக்கு வழங்கினார். அப்போது பேசிய பி.வி.சிந்து, ” உங்களை போன்றவர்களின் ஊக்கம் மற்றும் ஆசீர்வாதத்தால் தான் உலக சாம்பியன் போட்டியில் என்னால் தங்க பதக்கம் வெல்ல முடிந்தது. 2020-ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. அந்த போட்டிக்காக நான் தயாராகி வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எனது லட்சியம் ” என்று கூறினார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *