• October 21, 2019
0 Comments

சமீபத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ண மூர்த்தி தேனியில் படப்பிடிப்பில் மாரடைப்பால் உயிரிழந்த தகவல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. பள்ளியில் 10 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர் 17 வயதில் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்த போது நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடித்த ஜயா, தவசி மற்றும் பல காமெடி காட்சிகள் மக்கள் மனதில் இன்னும் நிலைத்து நிற்கின்றன . தற்போது அவரின் மறைவு குறித்து நடிகர் வடிவேலும் மிகவும் வருத்தத்தில் உள்ளார். மேலும் கிருஷ்ண மூர்த்தி காலில் அடிபட்டுக்கிடந்த காலகட்டத்தில் வடிவேலு தான் அவரின் அறுவை சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொண்டாராம். அதைப்போன்று பல சமயங்களில் அவருக்கு உதவியுள்ளாராம். அப்படியிருக்க கடைசியாக இறுதி சடங்கிலும் வடிவேலு தான் உதவியிருக்கிறார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *