• October 21, 2019
0 Comments

பாகற்காயை நடுவில் பிளந்து உள்ளே உள்ள விதைகளை அகற்றி விட்டு லேசாக உப்பு தடவி வைத்து விட்டு, பின் அரைமணி நேரம் கழித்து நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இதனால் அதில் உள்ள கசப்பு நீங்கும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்து வெங்காயம், மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமானதும், புளியை தண்ணீரில் கரைத்து ஊற்றி, கடலைமாவு, மிளகாய்த்தூளைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். பின் கொத்தமல்லித் தழையை போட்டு இறக்கி ஆறவைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவை ஆறியவுடன் பாகற்காயின் உள்ளே வைத்து நூலால் தனித்தனியாக கட்டி வைத்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் அவற்றினை பொரித்தெடுக்க வேண்டும். பச்சைநிறம் மங்கி வெந்தவுடன் அவற்றினை இறக்க வேண்டும். இப்போது சுவையான ஸ்டப்டு பாகற்காய் தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *