• November 20, 2019
0 Comments

இலங்கையில் அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தேர்தல் ஆணையத்தின் பணிப்பாளர் பி.டி.சில்வா கூறியுள்ளார் . இந்த விண்ணப்பங்கள் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார் . உரிய தகவல்கள் பூர்த்தி செய்யப்படாத மற்றும் முழுமைப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் . அதன்படி இந்த தடவை ஜனாதிபதி தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்பு இந்த மாதம் 31 ம் தேதியும் அடுத்த மாதம் ஒன்றாம் தேதியுமாக நடைபெறவிருக்கிறது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *