• October 21, 2019
0 Comments

நாளையும், நாளை மறுநாளும் இந்தியாவின் பிரதமர் மோடியும், சீனாவின் அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். தற்போது கிடைத்துள்ள தகவலில், மாமல்லபுரத்தை சீனாவின் அதிபர் ஜின்பிங் தேர்வு செய்ததற்க்கான காரணம் வெளியாகியுள்ளன. மாமல்லபுரத்தின் வரலாற்றுப்பின்னணியையும், கலாசாரத்தையும் அறிந்துதான் அவர் மோடியை சந்திக்க இந்த இடத்தை தேர்வு செய்துள்ளார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. பல்லவ சாம்ராஜ்யத்தில் 7-ம் நூற்றாண்டிலும், 8-ம் நூற்றாண்டிலும் அங்கு கட்டப்பட்ட குடைவரை கோவில்களும், கடற்கரை கோவில்களும், ரதங்களும், நினைவுச்சின்னங்களும், உள்ளத்தை கொள்ளை கொள்ளும் சிற்பங்களும் காலத்தால் அடித்துச்செல்லப்படவில்லை 1984-ம் ஆண்டு உலக பாரம்பரிய இடத்தின் பட்டியலில் மாமல்லபுரம் இடம் பெற்றுள்ளது. தற்போது பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையால் இந்த இடம் மேலும் சிறப்புமிக்க இடமாக மாறவுள்ளது. இதன் மூலம் தமிழர்களின் நாகரிகமும், கலாசாரமும், பண்பாடும் உலகமெங்கும் பரவப்படும்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *