• October 21, 2019
0 Comments

மும்பை :

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா – சிவசேனா கூட்டணிக்கு பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது, எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தோல்வியுற்ற மனநிலையில் தான் உள்ளனர். ராகுல்காந்தி பாங்காக் சென்றிருப்பதாக நான் செய்திதாளில் படித்தேன். தேர்தலில் தோற்க போவது அவருக்கு தெரிந்து விட்டது.

எனவே அவர் இங்கு வர தயாராக இல்லை. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரசாரம் செய்து வருகிறார். அவரும் தனது கட்சி பாதி காலியாகி விட்டதை அறிந்துள்ளார். தேசியவாத காங்கிரசின் மற்ற பாதியும் தேர்தலுக்கு பின் காலியாகி விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *