• October 21, 2019
0 Comments

ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 7 தமிழக மீனவர்கள் 2 விசைப் படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 7 பேரையும் கைது செய்து, அவர்களது 2 விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். விசைப்படகுடன் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரையும் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *