• October 21, 2019
0 Comments

சிம்பு நடிப்பில் கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்கள் வெளிவந்தன. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர். ஆனால் அந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது.

தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது அவர் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டது. மாநாடு படத்துக்கு போட்டியாக மகாமாநாடு படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா கன்னட படமான மப்டி படத்தை சிம்புவை கதாநாயகானாக நடிக்க வைத்து தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்தார். இதன் படபிடிப்பிலும் தாமதம் ஏற்பட்டு தனக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அவர் கைவிட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *