• October 21, 2019
0 Comments

முசாபர்பூர்:

இந்தியாவில் ஆங்காங்கே சிலர் கும்பலாக சென்று வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதை கண்டித்தும், இதில் தலையிட்டு கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த கோரியும் பிரதமர் மோடிக்கு, கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி பிரபலமானவர்கள் கடிதம் எழுதினர்.

அதில் அவர்கள் கூறி இருந்ததாவது, இந்தியாவில் சமீபகாலமாக நடைபெற்று வரும் பல்வேறு சோக சம்பவங்களை பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. முஸ்லிம்கள், தலித்துகள், பிற சிறுபான்மை இனத்தவர்களை கும்பல் அடித்து கொல்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 2016-ம் ஆண்டு தலித்துகளுக்கு எதிராக நாட்டில் 840-க்கும் மேற்பட்ட வன்முறைகள் நடந்து உள்ளன

இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வக்கீல் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் நாட்டை அவமானப்படுத்துவது போன்றும், மோடியின் பணியையும், செயலையும் குறைத்து மதிப்பிடுவது போன்றும் இருப்பதால் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார்.

அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சூர்ய காந்த் திவாரி, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு ஆகஸ்டு 20-ந் தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அங்குள்ள சதார் காவல் நிலையத்தில் கடந்த 4-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை பீகார் போலீசார் நேற்று ரத்து செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *