• October 21, 2019
0 Comments

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *