• October 19, 2019
0 Comments

விக்ரம் லேண்டரின் ஆயுள் 14 நாட்கள்தான். நாளை (20-ந்தேதி) அதன் ஆயுள் காலம் முடிகிறது. எனவே இனியும் விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

இந்த நிலையில் இஸ்ரோ, இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- உலகமெங்கும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கையாலும், கனவுகளாலும் நாங்கள் உத்வேகம் பெற்று முன்னோக்கி நடைபோடுவதை தொடர்வோம். வானையே எப்போதும் நாங்கள் இலக்காக கொள்ள எங்களுக்கு ஊக்கம் அளித்த உங்களுக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *