• October 19, 2019
0 Comments

மாஸ்கோ

அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருவதால் பெரும் பொருளாதார தடைகளை சந்தித்து வருகிறது. இதனால் வடகொரியாவை சேர்ந்த மக்கள் வரவாய் ஈட்டுவதற்காக பிற நாட்டு கடல் பகுதிகளில் சட்ட விரோதமாக நுழைந்து  பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சட்டவிரோதமாக ரஷிய எல்லைக்குள் நுழைந்த வடகொரிய நாட்டை சோந்த சிலர் கடல் உயிரினங்களை வேட்டையாடியுள்ளனர். அப்பொது இங்கு வந்த ரஷிய கடலோர காவல் படையை சேர்ந்த வீரர்கள் இதனை தடுக்க முயன்றபோது, ரஷிய கடற்படையினரை ஆயுதஙங்களால் தாக்கிவிட்டு அவர்கள் உடனடியாக படகுகளில் தப்பிச்சென்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ரஷியாவின் எல்லை பாதுகாப்பு படையினர், சிறப்பு படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் என அனைத்து பிரிவினரும் இணைந்து அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டதை தொடர்ந்து, வடகொரியாவை சேர்ந்த 161 வேட்டைக்காரர்களை அதிரடியாக கைது செய்தனர். மேலும், வேட்டைக்கு பயன்படுத்திய 13 மோட்டார் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *