• October 19, 2019
0 Comments

விருதுநகர்:

விருதுநகரில் நகரம், கிழக்கு, மேற்கு, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இணைந்து தமிழகத்தில் நல்லாட்சி நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.

வரும் 2021- ஆண்டும் அ.தி.மு.க.வே மீண்டும் ஆட்சி அமைக்கும். எடப்பாடியார் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். அ.தி.மு.க.விற்கு எங்கு பார்த்தாலும் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது.

ஸ்டாலின் இந்த ஆட்சி மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறையை மட்டும் கூறி வருகிறார். அரசின் திட்டங்களை கெடுக்கும் கூட்டமாக தி.மு.க. தலைமை முதல் தொண்டர்கள் வரை உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *