• October 19, 2019
0 Comments

மாஸ்கோ

ர‌ஷியாவின் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தவர். கிரோவோ-செபேட்ஸ்க் நகரை சேர்ந்த எவ்ஜீனியா சுல்யாதியேவா. என்ற 26 வயது இளம்பெண். நேற்று முன்தினம் குளிப்பதற்காக தனது வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்ற இவர், குளியல் தொட்டியின் அருகில் உள்ள மின்சார பெட்டியில் தனது செல்போனுக்கு ‘சார்ஜ்’ போட்டார்.

இதன’ பின்னர் அவர் குளியல் தொட்டிக்குள் இறங்கிய பொது, சற்றும் எதிர்பாராதவிதமாக ‘சார்ஜ்’ போடப்பட்டிருந்த அவரது செல்போன் குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்தது. இதில் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து எவ்ஜீனியா சுல்யாதியேவாவின் உடலில் மின்சாரம் பாய்ந்தது.

இதற்கிடையே தனது மகள் குளியலறைக்குள் சென்று நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த எவ்ஜீனியா சுல்யாதியேவாவின் தாய் உள்ளே சென்று பார்த்தபோது, எவ்ஜீனியா சுல்யாதியேவா குளியல் தொட்டிக்குள் பிணமாக கிடந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இநத சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எவ்ஜீனியா சுல்யாதியேவா உடலை கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *