• October 19, 2019
0 Comments

வா‌ஷிங்டன்

பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் விண்வெளி வீரராக நடித்துள்ள ‘ஆட் ஆஸ்ட்ரா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் விளம்பரத்துக்காக பிராட் பிட், அமெரிக்காவின் வா‌ஷிங்டன் நகரில் உள்ள நாசாவின் தலைமையகத்துக்கு சென்றார்.

அப்போது சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்த விண்வெளி வீரர் நிக் ஹேக்குடன் ‘வீடியோ கால்’ மூலம் பேசிய அவர், விண்வெளி மையத்தில் உள்ள வாழ்க்கை குறித்து கேட்டு அறிந்துகொண்டார். அப்போது, ‘‘விண்வெளி வீரர் கதாபாத்திரத்தில் யார் நம்பும்படியாக இருக்கிறார்? நானா? அல்லது கிராவிட்டி திரைப்படத்தில் நடித்த ஜார்ஜ் குளூனியா?’’ என பிராட் பிட் நகைச்சுவையாக கேட்டார்.

அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த நிக் ஹேக், ‘‘நிச்சயமாக நீங்கள் தான்’’ என்று கூறினார்.அதன் பின்னர், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பி வைத்த விக்ரம் மூன் லேண்டரைப் பார்த்தீர்களா?’’ என கேட்டார். அதற்கு பதிலளித்த ஹேக் ‘‘துரதிர்‌‌ஷ்டவசமாக அதனை நான் பார்க்கவில்லை’’ என கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகளை நாசா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *