• October 19, 2019
0 Comments

ஆரணி:

திருவண்ணாமலையை சேர்ந்த ஆறுமுகம் (வயது70) இவர் கடந்த 15-ந்தேதி ஆரணியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். இரவு 9.30 மணிக்கு ஆரணி டவுன் சத்தியமூர்த்தி சாலை ஸ்டேட் வங்கி எதிரில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அவரை வழி மறித்து, பின்னர் அவரை தாக்கி அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்தனர். இதனையடுத்து அந்த வழிப்பறி கும்பல் 3 பேர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவம் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை வாட்ஸ்-அப், பேஸ்-புக் உள்ளிட்ட சமூச வலைதளங்களில் பரப்பியுள்ளனர். ஆரணி டவுன் போலீசார் சி.சி.டி.வி. கேமரா பதிவை வைத்து விசாரித்தபோது அந்த முதியவர் திருவண்ணாமலை சேர்ந்த ஆறுமுகம் என்று தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் ஆரணியை சேர்ந்த பிரபல ரவுடி கும்பல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனால் தான் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *