• October 19, 2019
0 Comments

இஸ்லாமாபாத்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 சட்டப்பிரிவு நீக்கத்தை இந்திய அரசு திரும்ப பெறாவிட்டால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செய்தியாளாகளை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வதுடன், சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது சட்டப்பிரிவை ரத்துசெய்யும் முடிவையும் இந்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் இந்திய நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம். மேலும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இதுவரை இல்லாத அளவு மிகவும் உறுதியுடன் காஷ்மீர் பிரச்சினையை எடுத்துவைப்பேன்.

ஜிகாத் போராட்டத்துக்காக பாகிஸ்தானில் இருந்து யாராவது காஷ்மீருக்கு சென்றால், காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைக்கும் முதல் நபராக நான் ஆகிவிடுவேன். அதோடு காஷ்மீர் மக்களின் எதிரியாகவும் நான் கருதப்படுவேன். காஷ்மீர் மக்களை படைகளால் முற்றுகையிட்டு தாக்குவதற்காக இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *