• October 19, 2019
0 Comments

புளியங்குடி:

புளியங்குடி போலீசார் நேற்று டி.என்.புதுக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆட்டோ ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதில் இருந்த டி.என்.புதுக்குடி கற்பக வீதி தெருவை சேர்ந்த காசிராஜன், தாமரைச்செல்வன், சுரேஷ், மற்றும் ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் ஆகிய 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை சோதனை செய்த போது அதில் சுமார் 2 டன் அளவிலான ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *