• October 19, 2019
0 Comments

எகடெரின்பர்க்:

ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற் வரும் 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த கால் இறுதி போட்டியில் 63 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக், பிரேசிலின் வான்டெர்சன் ஆலிவிராவுடன் மோதினார். இந்த போட்டியில் அபாரமாக செயல்பட்ட மனிஷ் கவுசிக் 5-0 என்ற கணக்கில் ஆலிவிராவை விரட்டியடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியின் முலம் பதக்கத்தை உறுதி செய்தார்.

மேலும் விஜேந்தர்சிங் (2009-ம் ஆண்டு), விகாஸ் கிருஷ்ணன் (2011), ஷிவ தபா (2015), கவுரவ் பிதுரி (2017) ஆகியோர்களுக்கு பிறகு இந்தியர்கள் உலக குத்துச்சண்டையில் உலக குத்துச்சண்டை தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *