• October 19, 2019
0 Comments

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலைக்கும், வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையத்துக்கும் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விம்கோ நகர்- வண்ணாரப்பேட்டை இடையேயான விரிவாக்கம் பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மெட்ரோ ரெயில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 42 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விம்கோ நகர்- வண்ணாரப்பேட்டை இடையே விரிவாக்க பணிகள் முடிந்த பிறகு கூடுதலாக 10 புதிய மெட்ரோ ரெயில்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த ரெயில்கள் ஆந்திராவில் ஸ்ரீசிட்டியில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் ரெயில் அடுத்த மாதம் சென்னை கொண்டு வரப்படுகிறது. பின்னர் படிப்படியாக மற்ற ரெயில்கள் கொண்டு வரப்படும். 10-வது ரெயில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரும்.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *