• October 19, 2019
0 Comments

தேவையான பொருட்கள்: நறுக்கிய பனீர் துண்டுகள் – 20, வெண்ணெய் – 3 டீஸ்பூன், கஸ்தூரிமேத்தி – 1 டீஸ்பூன், சிகப்பு மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் – 4 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.

அரைக்க: முந்திரி – 10, தேங்காய் துண்டு – 1, வெங்காயம், தக்காளி – தலா 2, பட்டை, ஏலக்காய் – தலா 1, லவங்கம் – 2.

எப்படிச் செய்வது: அரைக்க கொடுத்த பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் அரைத்த விழுது, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்பு மிளகாய்த்தூள், உப்பு, கஸ்தூரிமேத்தி சேர்த்து கொதிக்கும் பொழுது பனீர், தேங்காய்ப்பால் கலந்து மேலும் ஒரு கொதி விட்டு இறக்கி சப்பாத்தி, பரோட்டா, தோசையுடன் பரிமாறவும்.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *