• October 19, 2019
0 Comments

இயற்கையாகவே பெண்களுக்கு திருமணம், குழந்தை பிறப்புக்குப் பின் உடல் எடை அதிகரித்து விடும். இதற்கு கர்ப்ப காலத்தில் எடை கூடுவது முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. கர்ப்ப காலத்தில் 12 கிலோ வரை எடை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது . கருவுற்றிருக்கும் போது உடல் எடை 9 மாதங்கள் நிதானமாகவும், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரித்திருக்கிறது. அப்படியிருக்க உடல் எடையைக் குறைக்கும் பொழுது சட்டெனக் குறைத்தால் அது பெரிய தீங்கில் கொண்டுபோய் விட்டு விடும் .எனவே உடல் எடையைக் குறைக்கும் போது சிறிது சிறிதாக குறைப்பதே மிகவும் நல்லதாகும். அவ்வாறு குழந்தை பெற்றெடுத்த பின்பு முதல் 40 நாட்கள் தாய்மைக்கு முக்கியமான காலம் என்றே கருதப்படுகிறது . உடல் அளவிலும், மன அளவிலும் பல வேதனைகளைக் கடந்து வந்திருக்கும் இத்தருணத்தில் பெண்கள் நன்றாக சாப்பிட்டு நல்ல ஓய்வு எடுத்து தங்களை உடல் அளவிலும், மனதளவிலும் மேம்படுத்தி கொள்ள வேண்டும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று உணவினை சரியாக சாப்பிடாமல் இருந்தால் உடலில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்திவிடுமாம். பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் நிச்சயம் மருத்துவரின் அனுமதியுடன் அவர்கள் சொல்லும் வரை பொறுமையாக இருந்து அதன் பின் எளிய உடற்பயிற்சிகளை தொடங்கலாம் . உடற்பயிற்சிகளை தொடங்குபவர்கள் உங்கள் உடலால் எவ்வளவு முடியும் என்பதை அதுவே சொல்லிவிடும். ஆகவே அதுவரை முயற்சிப்பது தான் நல்லது. அதனைத் தாண்டி அதிக ஈடுபாட்டுடன் முயற்சிக்கக்கூடாது. மிக மெதுவான நடையில் ஆரம்பித்து நடுத்தரமான நடை வரை நீங்கள் நடக்க முயற்சிக்கலாம். ஆரம்பித்ததும் வயிற்றுப் பகுதியை குறைக்க வேண்டும் என்று முழு கவனத்தையும் அதில் செலுத்தாமல், நடப்பதன் மூலம் உடலின் மொத்த எடையும் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். அதற்கு பிறகு இறுதியாக உங்கள் தசைகளுக்கு வலு சேர்க்கக்கூடிய பயிற்சிகளை நீங்கள் செய்து கொள்ளலாம் . தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளவும். உங்கள் கைகளை உங்கள் தோள்களுக்கு நேராக வைத்து கொள்ளவும் .தரையில் இருந்து மெதுவாக உங்கள் கால்களை உயர்த்தவும். அதன்பிறகு மெதுவாக கால்களை இறக்கி வைக்கவும் . கால்கள் பூமியில் படும்போது உங்கள் வயிற்றுப் பகுதி மிக சுலபமாக எடை குறைப்பிற்கு ஆயத்தமாகிவிடும் . ஆரம்பிக்கும் போது இது போல 8 தடவை 2 செட்டாக பண்ணவும் . தரையில் படுத்து கால்களை மடக்கிக் கொள்ளவும். பாதங்கள் தரையில் ஊன்றி இருக்க வேண்டும். அவ்வாறு மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அப்போது உங்கள் வயிறு நன்றாக உள்ளிழுக்கும் படி இந்த மூச்சு விடும் பயிற்சியை பண்ண வேண்டும். இதைப் போல மூச்சை உள்ளிழுத்தபடியே 5 நொடிகள் இருந்து கொள்ளவும் . மூச்சை வெளியே விடும்போது உங்கள் இடுப்பு பகுதியை சற்றே மேலே தூக்கவும். இதைப்போல 5 நொடி இருக்கவும். பின் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் . இதைப்போல 8 தடவை 2 செட்டாக பண்ணவும். இதற்கு முன்பு செய்ததைப் போலவே தரையில் படுத்து முழங்கால்களை மடித்து பாதங்களை தரையில் ஊன்றவும். கைகளை தலைக்கு பின்னே கோர்த்துக் கொள்ளவும். உங்கள் தலையையும் தோள்களையும் மெதுவாக உயர்த்தவும். இதைப்போல 8 தடவை இரண்டு செட் ஆக பண்ணவும்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *