• September 18, 2019
0 Comments

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ள ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தின் மூலம் காவிரி நதிக்கு புத்துயிரூட்டவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவிரி நதிப்படுகையில் அருகே 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் இந்த இயக்கத்தில் இரு மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிக்க சத்குரு ஜக்கி வாசுதேவ், தல காவிரியில் இருந்து கடந்த 3-ந்தேதி மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கி, ஓசூர், தருமபுரி, மேட்டூர், ஈரோடு வழியாக திருச்சியை வந்தடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ” நதிகளை மீட்போம் இயக்கம் நடத்திய போது நதிகள் இணைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்களிடையே தவறான புரிதலை கொண்டு சேர்த்தது. நதிகள் இணைப்பை ஒரு போதும் வலியுறுத்தவில்லை. அதே போல ஆற்றுநீர் வீணாக கடலில் கலப்பதாக கூறுவதையும் ஏற்க முடியாது. ஆண்டு தோறும் ஆற்று நீர் கடலில் கலந்தால்தான் விளை நிலம் விளைநிலங்களாக இருக்கும். இல்லையெனில் கடல்நீர் புகுந்து உப்புத் தன்மை அதிகரித்து விடும்காவிரியாறு கடந்த 50 ஆண்டுகளில் 70சதவீதம் அழிந்து விட்டது. அவ்வப்போது ஓடும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாக கொண்டு 40 சதவீதம் மட்டுமே அழிந்து விட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.காவிரியை மீட்க வேளாண் காடுகள் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். எனவேதான் காவிரி வடிநிலத்தில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடும் இயக்கத்தை ஈஷா தொடங்கியுள்ளது. இதற்கு கர்நாடக, தமிழக அரசுகளும், மத்திய அரசும் ஆதரவு அளித்துள்ளது ” என்று கூறினார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *