• September 18, 2019
0 Comments

கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்து வரும் கனமழை காரணமாக, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி முழு கொள்ளளவை எட்டியது. மேலும் நேற்றும் கனமழை பெய்ததால், நட்சத்திர ஏரி நிரம்பி வழிகிறது. கொடைக்கானலில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக, அங்குள்ள விவசாயிகள் பயிரிட்டுள்ள பீன்ஸ், உருளைக்கிழங்கு, சவ் சவ், பட்டாணி, காலிபிளவர், கேரட், முள்ளங்கி, பீட்ரூட், பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் நன்கு வளருகின்றன. மழை காரணமாக புதிய அருவிகள் உருவாகியுள்ளதால், சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்தபடி உள்ளனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *