• September 18, 2019
0 Comments

இலங்கையில் மஸ்கெலியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஸ்டொகம் தோட்ட பாக்ரோ பிரிவில் நேற்று முன்தினம் பகல் மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மஸ்கெலியா போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் 43 வயதுடைய ராமு மகாலெட்சுமி என்றும் இவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் வீட்டில் முதியவர் ஒருவருடன் சிறுவர் ஒருவர் மாத்திரமே இருந்ததாகவும், அந்த சமயத்தில் இருவரும் உடல்நலக்குறைவால் மாத்திரை எடுத்து தூக்கம் மேற்கொண்டதால் தூக்கிட்டு கொண்டதை கவனிக்க வில்லை என்றும், கணவர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடை பெற்றுள்ளதாக காவல்துறையினரின் தொடக்கநிலை விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *