• September 18, 2019
0 Comments

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கீழ்வன்னியனூரை சேர்ந்தவர் திருவேங்கடம் (34). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள நகை கடையில் வேலை செய்து வந்த இவர், அதே கடையில் வேலை செய்து வந்த செல்வி (33) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மேலும் திருமணத்திற்கு பின் சொந்த ஊருக்கு வந்த இருவரும் விவசாய வேலைகளை செய்து சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர்.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக செல்வி அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும், இந்த பேச்சு நீண்ட நேரம் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த திருவேங்கடம் தனது மனைவியை கண்டித்தும் அவர் செல்போன் பேச்சு தொடர்ந்து வந்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் நள்ளிரவு திருவேங்கடத்திற்கும் செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திருவேங்கடம் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து செல்வியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த செல்வி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கலசபாக்கம் காவல் நிலையம் சென்ற  திருவேங்கடம் மனைவியை கொன்ற வழக்கில் சரண் அடைந்தார்.

தொடாந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *