• September 18, 2019
0 Comments

கர்நாடக மற்றும் கேரள மாநில பகுதிகளில் மழை பொழிவு குறைந்து விட்டதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று 21 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 18 ஆயிரம் கன அடியாக குறைந்ததால், மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்ட உபரி நீர் இன்று நிறுத்தப்பட்டது. நீர்வரத்து குறைய தொடங்கியதால், அணையின் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், தற்போது நீர் மின் நிலையங்கள் வழியாக டெல்டா பாசனத்திற்காக 23 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *