• September 18, 2019
0 Comments

தேவையான பொருட்கள்

கிவி பழம் – 1
பெங்களூர் தக்காளி – 2
ஆப்பிள் – 1
இஞ்சிச் சாறு – 1/4 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 சிட்டிகை.

செய்முறை

மிக்ஸியில் நறுக்கிய ஆப்பிள், கிவி பழம், தக்காளியைச் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

இதனுடன் இஞ்சிச்சாறு, தேன், மிளகுத்தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

தேவையெனில் சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்துக் கூலாகக் குடிக்கவும்.

சத்தான கிவி ஆப்பிள் ஜூஸ் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *