• September 18, 2019
0 Comments

புதுடெல்லி :

டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசின் அளவை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் வாகன இயக்கம் மீண்டும் வருகிற நவம்பர் 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது. நவம்பர் மாதம் அண்டை மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதாலும், வயல்களை எரிப்பதாலும் டெல்லியில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வருகிற தீபாவளிக்கு டெல்லியில் மக்கள் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மாசு கட்டுப்பாட்டுக்கு தனி செயல்திட்டம் கொண்டுவரப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *