• September 18, 2019
0 Comments

மதுரை,

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த உதயராஜ் (29). என்பவர் மதுரை மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் பிரிவில் பட்ட மேற்படிப்பு படித்துக்கொண்டு, மருத்துவமனையில் மருத்துவராகவும் பணியாற்றி வந்தார். மேலும் திருமணமாகத இவர் தன்னுடன் படிக்கும் நண்பருடன் சேர்ந்து, மதுரை மதிச்சியம் பகுதியில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளார்..

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுரை பெரிய மருத்தவமனையில் பணியை முடித்துவிட்டு உதயராஜ் வீடு திரும்பியதை தொடர்ந்து, காலையில் அவருடைய வீட்டின் கதவு வெகுநேரமாக திறக்காமல் இருந்தது. தொடர்ந்து நண்பர்கள் வீட்டின் கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் மதிச்சியம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு உதயராஜ் பிணமாக கிடந்தார். அவர் அருகில் ஊசி மற்றும் மருந்துகள் சிதறி கிடந்தன. எனவே அவர் தனக்கு தானே விஷ ஊசியை போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையில் போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது, உதயராஜ் எழுதியதாக கடிதம் ஒன்று சிக்கியது.

இந்த கடித்தில் வேலைப்பளு மற்றும் மேற்படிப்பை சரவர படிக்க முடியாத வேதனையில் தற்கொலை முடிவை எடுத்தேன் என்று உருக்கமாக எழுதி இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *