• September 19, 2019
0 Comments

அரக்கோணம்

அரக்கோணம் நேருஜி நகர் 4வது தெருவில் வசிப்பவர் ரீட்டா (32). இவர் வீட்டில் நாய் வளர்த்து வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு தினமும் உணவு அளித்து வந்தார். இதனால் இந்த நாய்கள் அனைத்தும் இவர் வீட்டு முன்பே படுத்திருக்கும்.

இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் நாய்களுக்கு வி‌ஷம் கலந்த உணவை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தின்ற 10 நாய்கள் தெருவில் கிடந்து துடித்தன. இதனைக் கண்ட பொதுமக்கள் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.

கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிகிச்சை அளித்தனர்.
இதில் மூன்று நாய்கள் உயிர் பிழைத்தன. 7 நாய்கள் துடிதுடித்து இறந்தன. இதனைக் கண்ட அப்பகுதி பெண்கள் கதறி அழுதனர். அரக்கோணம் நகராட்சி ஊழியர்கள் மூலம் இறந்த நாய்கள் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

நாய்களுக்கு வி‌ஷம் கொடுத்த நபர் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *