• September 19, 2019
0 Comments

புதுச்சேரி

புதுவையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பெரில், புதுவை ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அதிரடிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது விபசாரத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், புரோக்கர்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுவை காமராஜர் சாலை பிருந்தாவனம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நடத்திய சோதனையில் விழுப்புரம் பாண்டியன், தட்டாஞ்சாவடி சுப்பையாநகர் ரவிசங்கர் (45), நெல்லித்தோப்பு அருள் படையாட்சி வீதி சிவசங்கர் (34), கருணாகரன் (40), புதுவை ராஜாநகர் ஜான்பால் (37) ஆகிய 6 பேரை கோரிமேடு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் ரெட்டியார் பாளையம் அதிரடிப்படை போலீசார் அரும்பார்த்தபுரம் நேரு வீதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தியபோது, அந்த வீட்டில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டனர். மேலும் விபசாரம் நடத்திய உருளையன்பேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேலுமணி (68), தேங்காய்திட்டு புதுநகர் ராஜேஷ் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *