• September 19, 2019
0 Comments

ஐதராபாத்:

கடந்த 10 நாட்களில் உஸ்மானியா அரசு ஆஸ்பத்திரியில் 100 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதேபோல பஞ்சஹரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், கட்சிபவ்லி ஆகிய இடங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் கடந்த ஒரு மாதத்தில் 200 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று உளளனர்.

இதேபோல நிஜாம் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் தினமும் 10 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஐதராபாத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உயிரிழப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *