• September 19, 2019
0 Comments

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரும்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில், “சென்னையில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள அண்ணா மாநாட்டுக்காக பரூக் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. எனவே, அவரை கண்டுபிடித்து தரவேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி உச்ச நீதிமன்ற நிதிபதி ரமணா அமர்வில் வைகோ தரப்பில் இன்று முறையிடப்பட்டது. ஆனால் மனுவை அவசரமாக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். எப்போது விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்றும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *