• September 19, 2019
0 Comments
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7 சீரிஸ் 9611 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 7904 ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.புகைப்படங்களை எடுக்க 25 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கேலக்ஸி ஏ30எஸ் விலை ரூ. 16,999 என்றும் கேலக்ஸி ஏ50எஸ் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 22,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *