• September 19, 2019
0 Comments

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பட தயாரிப்பாளர்கள் பேசினர். அவரும் நடிக்க சம்மதம் சொல்லி இருக்கிறார். ‘உங்கள் வாழ்க்கை கதையில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும்’ என்று பி.வி.சிந்துவிடம் கேட்டபோது,’எனது வாழ்க்கை கதையில் சமந்தா வைவிட தீபிகா படுகோன் நடித்தால் பொருத்தமாக இருப்பார். ஏனென்றால் அவரும் ஒரு பேட்மிண்டன் வீராங்கனை. ஆனாலும் எனது கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதை பட தயாரிப்பாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்’ என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *