• September 19, 2019
0 Comments

சென்னை

சென்னை பெருங்களத்தூர் அருகே இன்று மாலை தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவாகள், பேருந்தில் அலறியடித்து கொண்டு கீழே இறங்கினர்.

மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அருகில் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வ்நத தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *