• September 19, 2019
0 Comments

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இந்நிலையில், ‘தல 60’ படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் அஜித் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து படக்குழுவிடம் விசாரித்தபோது, “அது பழைய புகைப்படம். இன்னும் போட்டோஷூட் கூட நடத்தவில்லை. அதற்குள் எப்படி படப்பிடிப்பைத் தொடங்க முடியும்? அஜித்துடன் நடிப்பவர்கள் தேர்வு தற்போதுதான் நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும், பட பூஜையன்று படக்குழுவினர் யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளோம்” என்றனர். ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *