• September 19, 2019
0 Comments

சென்னை,

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இந்த படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து  ஏ.எல். விஜய்  இயக்கத்தில் ‘தலைவி’  என்ற பெயரில் ஒரு படமும்  உருவாகி வருகிறது. மேலும் இயக்குநர் கௌதம்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு  ‘குயின்’  என்ற தலைப்பில் வலைத்தள தொடர் ஒன்றை இயக்கி வரும் நிலையில், இதில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக், தனது குடும்பத்தினரின் அனுமதியின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை படமோ, வலைத்தள தொடரோ யாரும் எடுக்க கூடாது என  தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் வலைத்தள தொடருக்கு இதுவரை அனுமதி பெறவில்லை எனவும் தீபக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *