• September 19, 2019
0 Comments

தமிழ் ரசிகர்களையும் கவரும் வகையில் மலையாள இயக்குனர்கள் படங்களை இயக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’. நிவின் பாலி நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தில் அஜு வர்கீஸ், தன்யா, பிரஜன், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் தயான் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷான் ரகுமான் இசையமைத்துள்ளார்.

நிவின் பாலி மாமா மகளின் நெருங்கிய தோழி தான் நயன்தாரா. தோழியின் கல்யாணத்திற்காக கேரளா வரும் நயன்தாராவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் நிவின் பாலி, திருமணம் முடிந்தவுடன் நயன்தாரா சென்னைக்கு செல்கிறார். அவரை காண நிவின் பாலியும் சென்னைக்கு வருகிறார். இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். குடி, புகையை நிறுத்தினால் கல்யாணத்துக்கு ஓகே என கண்டிசன் போடுகிறார் நயன்தாரா. இந்த கண்டிசனை ஓகே செய்து நயன்தாராவை கரம் பிடிக்க நிவின் பாலி நடத்தும் டிராமா தான் இந்த ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *